அந்நியச் செலாவணியைக் கஜானாவில் நிறைத்துக் கொள்ளும் நாடுகளில் நாலாவதாகியிருக்கிறது இந்தியா.
உலக நாடுகளில் அந்நியச் செலாவணியை அதிகமாக வைத்திருக்கும் நாடுகளின் வரிசை சீனா, ஜப்பான், சுவிஸ், ரஷ்யா என்று இருந்தது. கடந்த வாரம் 580.3 பில்லியன் டொலர்களாகத் தனது அந்நியச் செலாவணியை அதிகரித்துக் கொண்டதன் மூலம் ரஷ்யாவின் 580.1 பில்லியன் டொலர்களைத் தாண்டி நாலாவது இடத்தைப் பெற்றிருக்கிறது இந்தியாவின் மத்திய வங்கி.
அந்நியச் செலாவணியை அதிகமாகத் தனது வைப்பில் வைத்திருப்பது மூலம் ஒரு நாடு தனது கடன் வாங்கும் தகுதியைச் சர்வதேச நாணயச் சந்தையில் அதிகரித்துக் கொள்ளலாம். அத்துடன், நாட்டின் பொருளாதார நிலைமையில் ஏற்படக்கூடும் வீழ்ச்சிகளுக்குப் பாதுகாப்பாகவும் அது பயன்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்