ஆர்மீனியாவின் சர்ச்சைக்குரிய பிரதமர் ஏப்ரல் மாதத்தில் பதவி விலகிப் புதிய தேர்தல் அறிவிக்கப் போகிறார்.
பக்கத்து நாடான ஆஸார்பைஜானுடன் சமீபத்தில் ஏற்பட்ட போரில் ஏற்பட்ட தோல்விக்குக் காரணம் பிரதமர் நிகோல் பஷ்னியான் என்று நாட்டின் ஒரு பகுதியார் குற்றஞ்சாட்டுகிறார்கள். இன்னொரு பகுதியார் பிரதமர் பக்கம் நிற்கிறார்கள். பிரதமரோ இராணுவத் தலைமையைச் சாடுகிறார். பிரச்சினைகள் ஆரம்பித்த இரண்டு மாதங்களாக ஒவ்வொரு பகுதியாரும் நாட்டின் நகரங்களில் ஊர்வலங்கள் நடாத்தி நாட்டின் இயக்கம் தடைப்பட்டிருக்கிறது.
https://vetrinadai.com/news/pashinyan-armenia/
சுமார் ஆறு வாரங்கள் நடந்த போரின் பின்னர் ஆர்மீனிய – ஆஸார்பைஜான் சர்ச்சைக்குரிய பிராந்தியங்கள் சிலவற்றைப் பிரதமர் ஆஸார்பைஜானிடம் கையளித்திருக்கிறார். அத்துடன் போர் நடந்த ஆர்மீனியப் பிரதேசங்களில் ரஷ்யாவின் அமைதி காக்கும் இராணுவம் நுழையவும் ஒப்பந்தம் வழி செய்திருக்கிறது.
சோவியத் யூனியனிலிருந்து ஆர்மீனியா பிரிந்து தனி நாடாக முன்பு அதே பகுதிகளில் சோவியத் படைகள் நடமாடிவந்தன. எனவே பல ஆர்மீனியர்கள் தமது பிரதமர் மீண்டும் நாட்டை ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் கொடுத்துவிட்டார் என்று கோபமடைந்திருக்கிறார்கள்.
ஏப்ரலில் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கும் பிரதமர் உடனடித் தேர்தலை அறிவித்துவிட்டுத் தான் இடைக்காலப் பிரதமராகக் கடமையாற்றப்போவதாகத் தெரிவித்திருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்