கேளிக்கை பூங்காக்கள் திறப்பு. பாரிஸ் டிஸ்னிலான்ட் ஜூன் 17 ஜேர்மனி யூரோபா-பார்க் மே 21.
கொரோனா வைரஸ் தொற்று நோயால் மூடப்பட்டிருந்த ஜரோப்பாவின் இரண்டு முக்கிய கேளிக்கைப் பூங்காக்கள் மீண்டும் திறக்கப்படுகின்றன.
பல லட்சம் உல்லாசப் பயணிகளைக் கவர்ந்த பாரிஸ் டிஸ்னிலான்ட் பூங்கா(Disneyland Paris) எதிர்வரும் ஜூன் 17ஆம் திகதி முதல் திறக்கப்படும் என்று அதன் நிர்வாகம் அறிவித்திருக்கிறது. கடந்த ஆண்டு ஒக்ரோபரில் மூடப்பட்ட பாரிஸ் டிஸ்னிலான்ட் ஏழு மாதங்களுக்குப்பின்னர் திறக்கப்படுகிறது. பூங்காவின்பொழுதுபோக்கு, கேளிக்கைப் பிரிவுகள்அனைத்தும் (Disneyland Parks and Walt Disney Studios, the Disney’s Newport Bay Club hotel and Disney Village) ஜூன் 17 முதல் இயங்கும்.
பூங்காவின் சகல பகுதிகளிலும் ஆறு வயதுக்கு மேற்பட்ட அனைவரும் மாஸ்க்அணிவது கட்டாயம் ஆகும். நுழைவுச்சீட்டுக்கள் பூங்கா கருமபீடங்களில்வழங்கப்படமாட்டாது. பதிவு செய்தேபெற்றுக்கொள்ள வேண்டும். சமூக இடைவெளி, ஆள் குறைப்பு போன்றசுகாதாரக் கட்டுப்பாடுகள் இறுக்கமாகப்பின்பற்றப்படும். கை சுத்திகரிக்கும்ஜெல் பம்பிகள் (hydroalcoholic gel) பலநூற்றுக் கணக்கான இடங்களில் பொருத்தப்பட்டிருக்கும்.
மிக்கி, மின்னி உட்பட (Mickey – Minnie,)உட்பட பூங்கா பிரபலங்கள் எவரையும் நெருங்கிக் கட்டி அணைக்க முடியாது. இவை போன்ற பல கட்டுப்பாட்டு விதிகள்அறிவிக்கப்பட்டுள்ளன.
ஜேர்மனியின் புகழ்பெற்ற பொழுது போக்குப் பூங்காவாகிய ‘யூரோபா-பார்க் (Europa-Park) தடுப்பூசி மற்றும் வைரஸ் பரிசோதனைச் சான்றிதழ்களுடன்பொதுமக்களை உள்ளே அனுமதிக்கப்போவதாக அறிவித்துள்ளது.
ஆறு வயதுக்கு மேற்பட்ட அனைவரும் சத்திரசிகிச்சை மருத்துவ மாஸ்க் (surgical masks) அணிந்திருத்தல் அவசியம். வருகை தருகின்ற நேரத்துக்கு 24 மணித்தியாலங்களுக்கு மேற்படாத காலப்பகுதியில் செய்யப்பட்ட தொற்றுப் பரிசோதனைச் சான்றிதழ் மற்றும் ஆளடையாள அட்டை என்பன பரிசீலிக்கப்படும். அல்லது தடுப்பூசி பாஸ் இருத்தல் அவசியம். மேலதிக விவரங்கள் பூங்காவின் உத்தியோக பூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்படும்.
யூரோபா-பார்க் நாளை வெள்ளிக்கிழமைதிறக்கப்படுகிறது.
குமாரதாஸன். பாரிஸ்.