இந்தியாவின் முதலாவது கொவிட் 19 நோயாளி, மீண்டும் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

திருச்சூரைச் சேர்ந்த 20 வயதுப் பெண்ணொருவரே இந்தியாவில் முதல் முதலாகக் கொரோனாத் தொற்றுக்கு உள்ளானவர் என்று அறியப்பட்டது. ஜனவரி 2020 இல் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்ட நோயாளி என்று அறியப்பட்ட அவர் , அவ்வியாதி முதலில் காணப்பட்ட சீனாவின் வுஹான் நகரப் பல்கலைக்கழகத்தில் மாணவியாக இருந்தவராகும்.

டெல்லிக்குப் போவதற்காகத் திட்டமிட்ட அவர் தன்னைப் பரிசோதனை செய்துகொண்டபோது மீண்டும் கொவிட் 19 தொற்று ஏற்பட்டிருப்பதாகத் தெரியவந்ததாக திரிச்சூர் மருத்துவ உயரதிகாரி கே.ஜே. ரீனா தெரிவிக்கிறார். இந்த முறை அவருக்கு நோயால் ஏற்படும் பாதிப்புக்கள் எதுவும் ஏற்பட்டிருக்கவில்லை.

மூன்றாம் வருட மருத்துவ மாணவியாக வுஹான் பல்கலைக்கழகத்தில் கற்றுவந்த அவர் விடுமுறையில் சொந்த ஊருக்குத் திரும்பிவந்திருந்த சமயத்திலேயே அவருக்குக் கொரோனாத் தொற்று ஏற்பட்டிருப்பது காணப்பட்டது. நோயால் பாதிக்கப்பட்ட அவர் பெப்ரவரி 2020 வரை சிகிச்சை பெற்று இரண்டு தடவை நோயிலிருந்து விடுதலை பெற்றதாக அறியப்பட்ட பின்னரே வீட்டுக்கு அனுப்பப்பட்டிருந்தார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *