டிசம்பர் 10 ம் திகதி 2020, கொண்டாட்டங்களில்லாத நோபல் பரிசுகள் வழங்கப்பட்ட நாள்.

அல்பிரட் நோபலின் ஞாபகார்த்தமாக வழங்கப்படும் பரிசுகள் வழக்கம்போல் டிசம்பர் 10 ம் திகதியான இன்று ஸ்டொக்ஹோம் சுவீடனிலும் ஒஸ்லோ, நோர்வேயிலும் வழங்கப்படவில்லை. பரிசுகளைப் பெற்றவர்களுக்கு அது அவரவர் நாடுகளிலேயே வழங்கப்பட்டது. 

எப்போதுமே அரசகுடும்பத்தினர் உட்பட சமூகத்தின் முக்கிய புள்ளிகளும், வெளிநாட்டு விருந்தாளிகளும், ஏற்கனவே நோபல் பரிசுகளைப் பெற்றவர்களும் கலந்துகொள்ளக் கோலாகலமாக நடக்கும் நோபலின் தின விழா இவ்வருடம் வித்தியாசமாக இணையத்தளத்தில் நடாத்தப்பட்டது. கொரோனாப் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகள் காரணமாக விருந்துகளும், விருந்தாளிகளும் தவிர்க்கப்பட்டன.

சமாதானத்துக்கான நோபல் பரிசு இவ்வருடம் ஐ.நா- சபையின் உணவுதவி கொடுக்கும் அமைப்பான World Food Program க்குக் கொடுக்கப்பட்டது. அந்த அமைப்பின் சார்பில் பரிசை டேவிட் பீஸ்லி பெற்றுக்கொண்டார். அவருக்கு இப்பரிசு ரோமிலிருக்கும் அவரது தலைமை அலுவலகத்தில் வழங்கப்பட்டது. 

முகக் கவசத்துடன் பரிசைப் பெற்றுக்கொண்ட டேவில் பீஸ்லி “இன்றைய உலகின் பணக்காரர்கள் சேர்த்து வைத்திருக்கும் மொத்தச் சொந்தின் பெறுமதி 400 திரில்லியன் டொலர்களையும் விட அதிகமானது என்று கணிக்கப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதுமிருக்கும் பசி, பட்டிணியைப் பற்பல தடவைகள் போக்க அத்தொகை போதுமானது,” என்று குறிப்பிட்டார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *