நெதர்லாந்தைச் சேர்ந்த புத்தபிக்கு சிறீலங்காவில் கொலை செய்யப்பட்டாரா?
சந்தேகத்துக்குரிய விதத்தில் ரத்கம காயலில் காணப்பட்ட புத்தபிக்குவின் உடலைக் கண்டெடுத்த பொலீசார் அதன் பின்னணியில் குற்றங்கள் ஏதாவது இருக்கலாமா என்று ஆராய்ந்து வருகிறார்கள்.
தமது கிராமத்தில் வழக்கமாக உலவிவரும், சுமார் கால் நூற்றாண்டாக சிறீலங்காவில் வாழ்ந்துவரும் ஒலாண்டெ ஜினரத்தின தேரோ ஓரிரு நாட்களாகக் காணாமல் போனதாக அக்கிராமத்தினர் அறிவித்த போது அவரைப் பற்றிய தேடல் ஆரம்பித்தது. அவரது உடல் கழுத்திலும் கால்களிலும் கற்களால் கட்டப்பட்ட நிலையில் பின்னர் குளத்திலிருந்து மீட்கப்பட்டது.
தியானக் கூட்டங்களில் பங்குபற்றும் அந்தப் பிக்குவுடன் வாழ்ந்த சுமார் 13 பிக்குகளிடம் அவரைப்பற்றிப் பொலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரை யாரோ குழுவினர் கொலை செய்து குளத்தில் எறிந்தனரா என்று உலவும் செய்தி பற்றியும் கிராமத்தினரிடையே விசாரணை நடந்து வருகிறது. இறந்தவரது உடலைப் பரிசோதித்ததில் அது ஒரு தற்கொலை என்று குறிப்பிடப்பட்டது.
சாள்ஸ் ஜெ. போமன்