சுற்றுலா விசாவில் எமிரேஸுக்குக் கூட்டிவந்து ஏமாற்றும் கும்பலிடம் எச்சரிக்கை!
விபரமறியாத பெண்கள் பலரை வேலைத்தரகர்கள் சுற்றுலா விசாவுடன் எமிரேட்ஸுக்குக் கூட்டிவந்தது தெரியவந்திருக்கிறது. அப்படியாக ஏமாற்றப்பட்ட இந்தியப் பெண்கள் 12 பேரை இந்தியத் தூதுவராலயத்தின் உதவியுடன் எமிரேட்ஸ் பொலீசார் மீட்டிருக்கிறார்கள்.
கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த 21 – 46 வயதினரான இப்பெண்களைக் கூட்டிச்சென்று வெவ்வேறு வீடுகளில் பணிப்பெண்களாக வேலைசெய்ய அனுப்பியிருக்கிறார்கள் வேலைத்தர்கர்கள். அடிக்கடி வெவ்வேறு இடங்களுக்கு மாறுவதை விரும்பாத அப்பெண்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து இந்தியாவிலிருக்கும் தங்கள் உறவினர்களுடன் தொடர்புகொண்டு அவர்கள் மூலமாகத் தூதுவராலய உதவியை நாடியதாகத் தெரியவருகிறது.
வேலைத் தரகர்களில் ஒருவரைக் கைதுசெய்த எமிராத்தி பொலீஸ் சுற்றுலா விசாக்களைக் கொடுத்து வேலை தருவதாகச் சொல்லும் தரகர்களை நம்பலாகாது. அம்முறையில் வேலைதேடி வருவது சட்டத்துக்கு எதிரானது என்று எச்சரிக்கிறது. விமானத்தில் ஏறமுதல் வேலைத் தரகர்களிடம் ஒழுங்கான வேலைக்கான ஒப்பந்தத்தைப் பெற்றுக்கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்