பேஸ்புக்கை நீதிமன்றத்துக்கு இழுக்கும் நாடுகள் பட்டியலில் அடுத்ததாக ஆஸ்ரேலியா.
இந்தச் சமூக வலைத்தள அரக்கன் அனுமதியெதுவுமின்றித் தனது பாவனையாளர்களின் பெயர், விபரங்களைச் சேமித்துவரும் பேஸ்புக் நாட்டின் பாவனையாளர்கள், வர்த்தகப் போட்டியாளர்களுக்கெதிராகச் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டு ஆஸ்ரேலியா இதுவரை கணிக்கப்படாத ஒரு தொகையை நஷ்ட ஈடாகக் கேட்டு நீதிமன்றம் செல்கிறது.
பேஸ்புக் பாவனையாளர்களின் நடப்பு விபரங்களைக் காப்பாற்ற அரசின் பக்கமாக எத்தனை நடவடிக்கை எடுத்தாலும் பேஸ்புக் வெவ்வேறு குறுக்கு வழிகளில் அந்த நடவடிக்கைகளைச் சேமித்து வர்த்தக நிறுவனங்களிடம் விற்று இலாபம் சம்பாதிக்கவும், போட்டி நிறுவனங்களை வீழ்த்தவும் பயன்படுத்துவதாகக் குறிப்பிடுகிறது ஆஸ்ரேலியா. தனது செயல்களுக்குப் பக்கபலமாக இன்ஸ்டகிராம், வாட்ஸப் செயலிகளையும் பாவிக்கிறது. எனவே மூன்று நிறுவனங்களும் ஒன்று சேர்ந்து இருப்பது போட்டி வர்த்தக நிறுவனங்கள் தலையெடுக்க இடைஞ்சலாக இருக்கிறது என்பது ஆஸ்ரேலியாவின் வாதம்.
கடந்த வாரத்தில் இதே போன்ற குற்றச்சாட்டை முன்வைத்து அமெரிக்காவின் பெரும்பாலான மாநிலங்களும், மத்திய அரசும் அமெரிக்க நீதிமன்றத்தில் அதே சமூகவலைத்தள அரக்கனுக்கு எதிராக வழக்குப் போட்டிருப்பது போன்றதா ஆஸ்ரேலியாவும் செயலும் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு “அமெரிக்கா வர்த்தப் போட்டியைப் பாதுகாப்பதற்காக வர்த்தக நீதிமன்றத்திடம் சென்றிருக்கிறது, நாம் பாவனையாளர்களின் தனிப்பட்ட விபரங்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் நீதிமன்றம் செல்கிறோம்,” என்கிறார் ஒரு அதிகாரி.
சாள்ஸ் ஜெ. போமன்