2027 இல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த இந்தியா விண்ணப்பித்தது.
பல துறைகளிலும் தன் பங்கெடுப்பைக் காட்டச் சர்வதேச ரீதியில் வெவ்வேறு நிகழ்வுகளில் பங்கெடுக்க முனைந்து வரும் இந்தியா 2027 இல் நடக்கப்போகும் ஆசிய உதைபந்தாட்டப் பந்தயங்களை நடத்த விரும்புவதாகத் தெரிவித்திருக்கிறது.
சவூதி அரேபியா, கத்தார், ஈரான், உஸ்பெஸ்கிஸ்தான் ஆகிய அப்போட்டிகளை நடாத்த விரும்பும் நாடுகளுடன் போட்டியிட இறங்கியிருக்கிறது, “உதைபந்தாட்ட உலகில் ஒரு தூங்கும் அரக்கன்” என்று சப் பிளத்தரால் குறிப்பிடப்பட்ட இந்தியா.
ஏற்கனவே 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 2021 உதைபந்தாட்டப் போட்டிகள், 2022 ஆசியப் பெண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டிகள் ஆகியவற்றை நடாத்தவிருக்கிறது இந்தியா.
இந்திய தேசிய உதைபந்தாட்டத் திணைக்களத்தின் தலைவர் பிரபுல் பட்டேல் “நாங்கள் உலகத் தரத்தில் உதைபந்தாட்டப் போட்டிகளில் விளையாடும் நிலைக்கு 2027 ம் ஆண்டளவில் வந்துவிடுவோம். அதைக் குறிவைத்து நாம் செயற்படுகிறோம்,” என்று குறிப்பிட்டிருக்கிறார். 2032 இல் ஒலிம்பிக்ஸ் பந்தயங்களை நடாத்தவும் விண்ணப்பிக்கும் திட்டத்திலிருக்கிறது இந்தியா.
சாள்ஸ் ஜெ. போமன்