LPL 2020 கிண்ணம் Jaffna Stallions வசம்
LPL 2020 என அழைக்கப்பட்ட லங்கா பிரிமியர் லீக் 2020 வெற்றிக்கிண்ணத்தை Jaffna Stallions அணி சுவீகரித்துள்ளது.
இறுதிப்போட்டியில் சந்தித்த Galle Gladiators அணியை 53 ஓட்டங்களால் வெற்றி பெற்று இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற Jaffna Stallions அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி Jaffna Stallions அணி இருபது ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 188 ஓட்டங்களை குவித்தது. அணியில் ஆகக் கூடுதலாக சொகைப் மலிக் 35 பந்துகளில் 46 ஓட்டங்களை குவித்தார். அத்துடன் அணித்தலைவர் திசார பெரேரா வெறும் 14 பந்துகளில் 39 ஓட்டங்களை குவித்தது இறுதி ஓவர்களில் விறு விறு என ஓட்டங்களை Jaffna Stallions அணியினால் பெற முடிந்தது.
தொடர்ந்து துடுப்பாடிய Galle Gladiators அணி ஆரம்ப ஓவர்களில் மள மள என்று விக்கெட்டுக்களை இழந்த நிலையில் இறுதியில் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 135 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இதனடிப்படையில் Jaffna Stallions அணி LPL 2020 வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கியது.
இதே அணியில் வடக்கு கிழக்கின் வீரர்களும் உள்ளடக்கப்பட்டிருந்தார்கள் என்பதும் அதில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி கிரிக்கெட் வீரன் வி.வியாஸ்காந் இரண்டு போட்டிகளில், அணியில் உள்ளடக்கப்பட்டிருந்தார் என்பது பலரது கவனத்தை ஈர்த்திருந்தது.
எதிர்காலத்தில் உலக அணிகளில் வடக்கு கிழக்கின் வீரர்களும் பிரகாசிக்க இப்படியான சந்தர்ப்பங்கள் வழிகோலவேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பாகவும் மாறியுள்ளது.
வடக்கு கிழக்கின் கிரிக்கெட் வீரர்களுக்கு வெற்றிநடை வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறது.