பஹ்ரேன் அரசன் ஷேக் ஹமாத் பின் ஈஸா அல் கலீபா முதலாவதாக கொவிட் 19 எடுக்கும் நாட்டுத் தலைவர்.
இவ்வார ஆரம்பத்தில் கொவிட் 19 மருந்தை நாட்டு மக்களுக்கு விநியோகிக்கும் முதலாவது அரபு நாடாக பஹ்ரேன் அதை அறிவித்தது. அதைத் தொடந்து தடுப்பு மருந்துகள் வருவிக்கப்பட்டு நாட்டின் அரசர் ஹேக் ஹமாத் அதைப் பெற்றுக்கொண்டார்.
அமெரிக்காவின் வரவிருக்கும் ஜனாதிபதி ஜோ பைடன் அடுத்த வாரத்தில் கொவிட் 19 தடுப்பு மருந்தை எடுக்கப்போவதாக அறிவிக்கப்படுகிறது. தற்போதைய உப ஜனாதிபதி மைக் பென்ஸ் வெள்ளியன்று தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொள்கிறார். பல நாடுகளிலும் பரவலாக இருக்கும் தடுப்பு மருந்து பற்றிய அவநம்பிக்கையைப் போக்குவதற்காக மேலும் பல தலைவர்களும் முன்னணியில் இம்மருந்துகளைப் பிரபலங்களுடன் சேர்ந்து எடுத்துக்கொள்வார்கள் என்று கருதப்படுகிறது.
சாள்ஸ் ஜெ.போமன்