தேசிய கல்வி நிறுவக விசேட கல்வி டிப்ளோமா கற்கைநெறி விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன
இலங்கை தேசிய கல்வி நிறுவக விசேடகல்வி தொடர்பான டிப்ளோமா கற்கை நெறி 2021க்கான விண்ணப்பங்கள் கோரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட கற்கைநெறி பார்வை ,கேட்டல்,உடலியல்,ஓட்டிசம் மற்றும் கற்றல் குறை நிலைகள் போன்றவற்றால் விசேட தேவைகளை எதிர்கொள்ளும் மாணவர்களை இனங்கண்டு அவைகளை விருத்தி செய்வதற்கான அடிப்படை தேவைகளை இனங்கண்டு தேர்ச்சிகளை வழங்குவதற்கான பகுதிநேரக் கல்வி நெறியாகும்.
மேற்படி கல்வி நெறிக்கு விண்ணப்பிக்கும் ஒருவர் 55 வயதுக்கு உட்பட்டவராகவும் க. பொ.த உயர்தர தரப்பரீட்டசையில் சித்தியடைந்தவராக இருத்தல் அவசியமாகும்.அத்துடன் குறிப்பிட்ட விண்ணப்பதாரி ஆசிரியராக ,அல்லது கல்வியல் அதிகாரியாகவோ இருப்பது அவசியம் என தேசிய கல்வியல் நிறுவகம்,மகரகம. அறிவித்துள்ளது.
2021ம் ஆண்டு பெப்பிரவரி மாதம் 15 ம் திகதி விண்ணப்ப முடிவுத்திகதியாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த விண்ணப்பம் கோரல், நேர்முகத் தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தேசிய கல்வி நிறுவகத்தில் விரிவுரைகளும் தெரிவு செய்யப்பட்ட விசேட பாடசாலைகளில் செயலமர்வுகளும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தாயகத்தில் ஏற்றப்பட்ட பல தாக்கங்களால் பல இன்னல்களை எதிர்கொள்ளும் எதிர்கால சந்ததியினருக்கு கற்றலில் இருக்கும் விசேட தேவைகளை இனங்கண்டு விருத்திகாணச்செய்ய இந்த கற்கைநெறி பலருக்கும் வழிகாட்டும் என்ற வகையில் இது எமது மக்களின் கல்விச்சமூகத்திற்கு முக்கியத்துவம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.