கொரோனாப் பரவலால் தாய்லாந்தின் மிகப்பெரிய கடல்விலங்குகள் சந்தை மூடப்பட்டது.
தாய்லாந்திலிருக்கும் மஹச்சாய் கடல்விலங்குகள் சந்தையிலிருந்து சுமார் 550 பேருக்குக் கொரோனாத் தொற்றுக்கள் பரவியிருப்பதாகக் கண்டறியப்பட்டு அச்சந்தை உடனடியாக மூடப்பட்டது. தொற்று காணப்பட்ட எல்லோருமே மெல்லிய சுகவீனமே அடைந்திருக்கிறார்கள் என்றும் அவர்களில் வெளிநாட்டுத் தொழிலாளிகளே என்று குறிப்பிடப்படுகிறது.
பாங்கொக்குக்கு வெளியே இருக்கும் இந்தப் பிராந்தியத்தில் வாழ்பவர்களில் சுமார் 30 விகிதமானவர்கள் வெளிநாட்டுத் தொழிலாளிகளாகும். அவர்களில் பெரும்பாலானோர் மியான்மாரைச் சேர்ந்தவர்கள். டிசம்பர் 4 ம் திகதியே மியான்மாரிலிருந்து வந்த ஒருவரிடம் தொற்று அடையாளம் காணப்பட்டது. தாய்லாந்தின் மக்கள் ஆரோக்கிய அமைச்சர் அங்கே தற்போது ஏற்பட்டிருக்கும் தொற்றுக்கள் மியான்மாரிலிருந்து வரும் மீனவர்களிடமிருந்தே வந்திருக்கலாம் என்று சந்தேகப்படுவதாகத் தெரிவித்திருக்கிறார்.
சீனாவின் எல்லை நாடுகளிலொன்றாக இருப்பினும் மிகக்குறைந்த அளவிலான கொரோனாத் தொற்று மட்டுமே ஏற்பட்ட நாடு தாய்லாந்து ஆகும். அங்கே சுமார் 4,000 பேர்களுக்கு இதுவரை தொற்று ஏற்பட்டு சுமார் 60 பேர் மட்டுமே அவ்வியாதியால் இறந்திருக்கின்றன. சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னரிரிந்து அங்கே கொரோனாத் தொற்றுக்கள் இல்லாமலே இருந்து வருகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்