ஈரானையும் ஆப்கானிஸ்தானையும் இணைக்கும் ரயில் பாதை திறந்துவைக்கப்பட்டது.
2007 இல் ஆரம்பிக்கப்பட்ட கிழக்கு ஈரானையும் மேற்கு ஆப்கானிஸ்தானையும் இணைக்கும் 140 கி. மீற்றர் ரயில் பாதை திறந்துவைக்கப்பட்டது. எல்லைகளின் இரண்டு பக்கங்களிலும் ரயில் பாதையை அமைக்கும் செலவை ஈரானே ஏற்றுக்கொண்டிருக்கிறது.
“அமெரிக்கா எங்கள் மீது போட்டிருக்கும் வர்த்தகக் கட்டுப்பாடுகளையும் மீறி நாங்கள் இந்தப் பாதையை வெற்றிகரமாகக் கட்டியிருக்கிறோம்,” என்று ஈரானியத் தலைவர் ஆயதுல்லா கமெனி குறிப்பிட்டிருக்கிறார். “எங்கள் நண்பர்களான ஈரான் எங்களுக்குத் தந்திருக்கும் பரிசு இது,” என்று திறப்பு விளாவில் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி குறிப்பிட்டிருக்கிறார்.
துருக்கி, பாகிஸ்தான், துருக்மேனிஸ்தான் ஆகிய நாடுகளுடன் ஏற்கனவே ரயில் போக்குவரத்துப் பாதைகளைக் கொண்ட ஈரான் இந்த ரயில் பாதையை ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியிலிருக்கும் நகரமான ஹெராத் வரை தொடர விரும்புகிறது. ஒரு காலத்தில் கிழக்கு, தென்கிழக்கு ஆசிய நாடுகளை அராபிய நாடுகளுடன் இணைத்த வீதிகளான “பட்டு வீதி” என்ற வர்த்தக தொடர்பை மீண்டும் நிஜமாக்க விரும்பும் நாடுகளிலொன்று ஈரான் என்பது குறிப்பிடத்தக்கது.
சாள்ஸ் ஜெ. போமன்