முதலாவது தேசிய பெண்கள் உதைபந்தாட்டப்போட்டிகளை நடாத்திச் சரித்திரம் படைக்கும் சவூதி அரேபியா.
பெண்கள் உதைபந்தாட்டத்தில் பங்குகொள்வது மட்டுமல்ல அவற்றை மைதானத்தில் சென்று பார்ப்பதே சிலவருடங்களுக்கு முன்னர் வரை தடுக்கப்பட்டிருந்த சவூதி அரேபியா நாட்டின் பெண்களுக்குத் திட்டமிட்டு அவ்விளையாட்டை அறிமுகப்படுத்துவதுடன் தேசியக் கோப்பைக்கான விளையாட்டுகளையும் நடத்தியிருக்கிறது.
சவூதி அரேபிய அரசின் விளையாட்டு அமைச்சினால் நாடு முழுவதுமுள்ள நகரங்களில் 17 – 30 பெண்களுக்கான உதைபந்தாட்டக் குழுக்கள் அமைக்கப்பட்டு நவம்பர் மாதத்தில் 24 குழுக்களிடையே தேர்வுகள் நடாத்தப்பட்டன. அவற்றில் வெற்றிபெற்ற குழுக்கள் கால், அரை இறுதிப் போட்டி ஆட்டங்களில் சில நாட்களுக்கு முன்னர் விளையாடி சாலஞ்ச் ரியாட் குழு முதல் பரிசுக்கான 150,000 ரியால்களையும் கோப்பையையும் வென்றது.
சாள்ஸ் ஜெ. போமன்