டுபாயில் மாட்டிக்கொண்ட இந்தியர்களுக்கு இலவச தங்குமிடம், உணவு வசதிகள்.
பிரிட்டனில் படுவேகமாகப் பரவிவரும் திரிபடைந்த கொரோனாக் கிருமிகளுக்குப் பயந்து சவூதி அரேபியாவிலிருந்து ஒவ்வொன்றாக அரபு நாடுகளும் தத்தம் விமான நிலையங்களிலிருந்து போக்குவரத்தை முற்றாக நிறுத்திவிட்டிருக்கின்றன. அதனால், இந்தியாவிலிருந்து டுபாய் வழியாக சவூதி அரேபியா, குவெய்த் போன்ற நாடுகளுக்குச் செல்லவந்திருந்த இந்தியர்கள் டுபாயில் மாட்டிக்கொண்டார்கள்.
அந்தப் பயணிகளுடைய விமானம் எப்போ போகுமென்று தெரியாத நிலையில் அவர்கள் எமிரேட்ஸுக்குள்ளும் நுழைய முடியாது. காரணம் எமிரேட்ஸுக்குள் நுழைபவர்கள் 14 நாட்கள் அங்கிருக்கும் தனிமைப்படுத்தலை முடித்துக்கொள்ளவேண்டும். மாட்டிக்கொண்ட சுமார் 300 இந்தியப் பயணிகளிடம் தங்குமிடம், உணவு போன்றவைக்கான செலவுக்குப் பணமிருக்கவில்லை.
டுபாயிலிருக்கும் இந்திய – எமிரேட்ஸ் உதவும் நண்பர்கள் குழுவொன்று கையிலெதுவுமில்லாமல் மாட்டிக்கொண்ட ஏழை இந்தியர்களுக்காக அருகேயிருந்த கட்டடமொன்றை வாடகைக்கு எடுத்து அங்கே சகல வசதிகளையும் செய்துகொடுத்திருப்பதாக அறிவிக்கிறார்கள். விமான நிலையத்திலிருந்து அந்த இந்தியர்களை வாகனங்களில் தங்குமிடங்களுக்கு அழைத்துச் சென்று அங்கே உணவு, உடை மற்றும் எல்லாத் தேவைகளையும் இலவசமாகக் கொடுத்துதவியிருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்