காணாமல் போன தனது மூத்த சகோதரி பற்றி ஆராயும்படி பிரிட்டன் பொலீசுக்கு எமிரேட்ஸ் அரசகுமாரியின் கடிதம்.

ஒரு வாரத்தின் முன்னர் சர்வதேச ரீதியில் பரபரப்பாகப் பேசப்பட்ட எமிரேட்ஸ் அரசகுமாரி லத்தீபாவின் மறைவைப் பற்றிய விபரங்கள் இன்னும் வெளிவரவில்லை. அதையடுத்து அவரது நண்பர்கள் மூலமாக அவர் எழுதிய கடிதமொன்று பிரிட்டிஷ் பொலீசாரிடம் கிடைத்திருக்கிறது.

https://vetrinadai.com/news/princess-latifa-dubai/

இப்போது அரசகுமாரி லத்தீபா எழுதியதாகக் குறிப்பிடப்படும் கடிதத்தில் அவர் 2000 இல் பிரிட்டனில் வைத்து அவர்களது தந்தையால் கடத்தப்பட்ட மூத்த சகோதரி ஷம்ஸா என்னானார் என்பதைப் பற்றி விசாரித்தறியும்படி கோரப்பட்டிருக்கிறது.

ஆகஸ்ட் 2000 இல் லண்டனில் தனது தந்தையுடன் ஷம்ஸா தங்கியிருந்தார். அவர், அச்சமயம் தப்பியோடினார். ஒரு மாதத்தின் பின்னர் கேம்பிரிட்ஜ்ஜில் ஒரு ஹோட்டலிலிருந்து அவர் காணாமல் போனார். இரகசியமாக அவரது தந்தை அவரை வேட்டையாடிக் கைப்பற்றி மயக்க மருந்து போட்டு டுபாய்க்கு விமானத்தில் கடத்தியதாகச் செய்திகள் வெளிவந்திருந்தன. அதன் பின்னால் அவர் என்னானார் என்பது பற்றி எவருக்கும் எதுவும் தெரியாது. ஷம்சாவின் வயது இப்போது 38 ஆகும்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *