எங்கள் சூரிய அமைப்பின் ஆரம்பக்காலத்தில் வெடித்துச் சிதறிய விண்கல்லொன்று பூமிக்கு நெருக்கமாகப் பறக்கிறது.
படுவேகமாக எங்கள் பூமிக்கு அருகே மின்னல் வேகத்தில் பறக்கப்போகும் விண்கல்லொன்று இன்று, ஞாயிறன்று வான்வெளி விஞ்ஞானிகளால் காணக்கூடியதாக இருக்கும். 2001 F032 என்ற அடையாளப் பெயரால் குறிப்பிடப்படும் அந்த விண்கல் பூமியில் இப்போதோ, நீண்ட எதிர்காலத்திலேயோ மோதப்போகும் அபாயமில்லை என்று நாஸா அறிவிக்கிறது.
மணிக்கு 124,000 கி.மீற்றர் வேகத்தில் பறக்கப்போகும் இந்த விண்கல்லே பூமிக்கு அருகே பறக்கும் ஆகக்கூடிய வேகத்திலான விண்கல்லாகும்.
இந்த விண்கல் பறக்கப்போகும் பாதை பூமிக்கும் சந்திரனுக்குமிடையே இருக்கும் இடைவெளியைப் போன்று 5 மடங்குக்கு அதிகமாக சுமார் 2 மில்லியன் கி.மீ தூரத்திலிருக்கிறது. ஆயினும் இதை ஒரு அபாயகரமான தூரமாகவே குறிப்பிடுகிறார்கள் விஞ்ஞானிகள். உலகின் அதியுயரமான கோபுரமான புர்ஜ் காலிபாவைப் போல இரண்டு மடங்கான இந்த விண்கள் சுமார் 1.7 கி.மீற்றர் நீளமானது.
சாள்ஸ் ஜெ. போமன்