ஒரே நாளில் ஒரு லட்சம் இறப்புக்களால் மெக்ஸிகோவின் கொவிட் 19 இழப்புக்கள் அதிகமாகின.

இறப்புச் சான்றிதழ்களை மீளாய்வு செய்த மெக்ஸிகோ தாம் ஏற்கனவே அறிவித்திருந்ததை விட மிக அதிகமான பேரின் இறப்புக்களுக்குக் காரணம் கொவிட் 19 என்று புரிந்து கொண்டது. அதனால் புள்ளிவிபரங்களில் இறந்தவர்கள் தொகை 100,000 ஆல் அதிகரிக்கப்பட்டது.  

தற்போதைய புள்ளிவிபரங்களின்படி மெக்ஸிகோவில்தால் கொவிட் 19 உலகில் இரண்டாவது அதிகமான எண்ணிக்கையில் மனித உயிர்களைக் குடித்திருக்கிறது. 321 000 பேர் கொவிட் 19 ஆல் மெக்ஸிகோவில் இறந்திருக்கிறார்கள். இதுவரை இரண்டாவது அதிக இறப்புக்களைக் கொண்டிருந்த நாடு பிரேசிலாகும். 

மொத்த எண்ணிக்கையில் அதிக இழப்புக்களை அமெரிக்காவே அடைந்திருக்கிறது. ஆனால், மில்லியன் பேருக்கு அதிக இறப்புக்களை அடைந்த நாடு செக் குடியரசு ஆகும். 

பிரேசிலில் இதுவரை 312,000 பேர் கொவிட் 19 ஆல் இறந்திருப்பதாக அரசின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், நாட்டின் மருத்துவ சேவையினர் அரசு புள்ளிவிபரங்களில் வேண்டுமென்றே தில்லுமுல்லு செய்து இறந்தவர்கள் எண்ணிக்கையை முடிந்தவரை குறைவாகக் காட்டிவருவதாகக் குற்றஞ்சாட்டி வருகிறார்கள். அவர்களுடைய கணிப்புப்படி பிரேசிலில் இவ்வியாதியால் இறந்தவர்கள் தொகை ஏற்கனவே 400,000 ஐத் தாண்டிவிட்டது.

கொரோனாத் தொற்றுக்களின் ஆரம்பம் முதல் அது ஒரு ஜலதோஷம் போன்றது மட்டுமே என்றும் அதற்காகப் பெரியதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லையென்றும் பிரேசில் ஜனாதிபதி பொல்சனாரோ பெருந்தொற்றின் அபாயங்களைப் பற்றி கவனமெடுத்து நடவடிக்கைகளெடுக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஜனாதிபதியின் பக்கபலமாக இருந்து வந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் இருவருமே திங்களன்று பதவி விலகினார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *