நோர்வீஜிய ஆர்ட்டிக் பிராந்தியத்தில் பிரிட்டிஷ் மீனவர்கள் இனிமேல் மீன் பிடிக்க முடியாது.
பிரிட்டன் – நோர்வே ஆகிய நாடுகளுக்கு இடையே நடந்த மீன் பிடி உரிமைகள் பற்றிய பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட பின்னடைவால் பிரிட்டனின் மீனவர்கள் இனிமேல் நோர்வேக்கு உரிய உப வடகடல் பிராந்தியத்தில் மீன் பிடிப்பதற்கு உரிமையற்றவர்கள் ஆகிறார்கள். ஐரோப்பிய ஒன்றிய – பிரிட்டிஷ் பிரிவு பேச்சுவார்த்தைகள் மூலமும் அப்பகுதியில் தொடர்ந்தும் மீன்பிடிக்க அனுமதி பெறுவது பற்றி பிரிட்டன் முயற்சித்துத் தோல்வியடைந்தது.
“பிரிட்டன் அந்த மீன்பிடி உரிமையைத் தொடர முடியாதது நாட்டின் மீனவர்களுக்கு மிகப்பெரும் இழப்பு என்று கருதப்படுகிறது. artic cod என்ற வகை மீனைத் தொடர்ந்தும் ஏற்றுமதி வரியின்றி நோர்வேயால் பிரிட்டிஷ் சந்தையில் விற்கமுடியும். ஆனால், அதை நோர்வேயிடமிருந்து தான் பிரிட்டர்கள் வாங்கிக்கொள்ளவேண்டும்,” என்று புதிய நிலைமையை பிரிட்டிஷ் மீன்பிடியாளர் நிறுவனங்கள் விபரிக்கின்றன.
குறிப்பிட்ட நோர்வே நீர்ப்பிராந்தியத்தில் பிரிட்டிஷ் மீன்பிடிகாரர் மீன்பிடிக்க அனுமதி பெறுவதற்காக நோர்வேக்கும் பிரிட்டிஷ் நீர்ப்பிராந்தியத்தில் அனுமதி கொடுக்கவேண்டும். அந்த அளவுகளில் இரண்டு பகுதியாருக்கும் ஒரேவிதமான கருத்து இல்லாததாலே வேறு வழியின்றி இந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தியிருப்பதாக பிரிட்டனின் மீன்வளத் திணைக்களம் தெரிவிக்கிறது. அதையே நோர்வேயின் பகுதியிலிருந்து தெரிவிக்கப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்