“கொவிட் 19 தொற்றுக்களால் இறந்தவர்கள் தொகை வெளிப்படுத்தப்பட்டதை விட மூன்று மடங்கு அதிகமானது!”
உலக மக்கள் ஆரோக்கிய நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையொன்றின்படி உலகில் இதுவரை கொவிட் 19 ஆல் இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் எட்டு மில்லியன் பேருக்குக் குறையாது என்று தெரிவிக்கப்படுகிறது. இதுவரை உலக நாடுகளில் இத்தொற்று வியாதியால் இறந்தவர்கள் தொகை உத்தியோகபூர்வமாக சுமார் 3.4 மில்லியன் பேராகும்.
உலகின் பல நாடுகளில் இறந்தவர்களைப் பதிந்துகொள்வதில் அதிக கவனமெடுக்கப்படுவதில்லை, தொற்று நோய்க்காகப் பரிசோதிக்கப்பட முதலே ஒரு சாரார் இறந்திருக்கலாம், பல நாடுகள் அரசியல் காரணங்களுக்காகத் தமது தொற்று நோய் இறப்புகளை உண்மையாகக் காட்டவில்லை, பல பிராந்தியங்களில் இதை ஒழுங்காகக் கண்காணித்து எண்ணிக்கைகளைப் பதிந்துகொள்ளும் வாய்ப்புக்களில்லை போன்றவை இறப்பு எண்ணிக்கை உண்மையான இறப்புக்களை விடக் குறைவாக வெளியிடப்பட்டிருப்பதற்குக் காரணமாக இருக்கலாம் என்று தெரிகிறது.
கொவிட் 19 ஆல் நேரடியாக இறந்தவர்கள் தவிர அதன் பக்கவிளைவுகளாலும் பலர் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்