புதியதொரு கொரோனாத் திரிபு வியட்நாமில் முதல் தடவையாகக் காணப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.
வியட்நாம் மருத்துவசாலையொன்றில், சமீபத்தில் புதிய திரிபடைந்த கொரோனாக் கிருமி ரகமொன்றை அடையாளங் கண்டிருப்பதாக நாட்டின் மக்கள் ஆரோக்கிய அமைச்சர் நுகியன் தனா லோங் தெரிவித்திருக்கிறார். அது இந்திய, பிரிட்டிஷ் திரிபுகளிரண்டையும் ஒன்றிணைத்து உருவாகியிருப்பதாக அவர் தெரிவித்தார். புதிய ரகம் என்பதால் அதற்கான அடையாளப் பெயர் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
புதிய அந்தத் திரிபானது ஒருவருள் பரவ ஏற்கனவே இருக்கும் கொரோனாக் கிருமிகளைப் போல 1 – 14 நாட்கள் செல்லாது. 1 – 2 நாட்களுக்குள்ளேயே ஒருவரில் உடலில் பரவ ஆரம்பித்து நாலைந்து நாட்களுக்குள் விளைவுகளை வெளியே அடையாளங்காட்ட ஆரம்பிக்கிறது. அது பரவாதிருக்கத் தீவிரமாக நடவடிக்கைகள் எடுத்து வருவதாக அமைச்சர் லோங் தெரிவித்திருக்கிறார்.
வியட்நாம் கொரோனாத் தொற்றுக்களை அதிகம் தனது நாட்டில் பரவாமல் கட்டுப்படுத்தியிருக்கும் ஒரு நாடாகும். இதுவரை 47 இறப்புக்களையே கண்டிருக்கிறது. ஆனால், சமீப நாட்களில் தொற்று 63 நகரங்களி. 32 இல் பரவியிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. சமீபத்தில் 3,6000 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் பாதிப்பேர் ஏப்ரல் மாதத்திலிருந்து தொற்றுக்களால் பாதிக்கப்பட்டவர்களாகும். அங்கே கொரோக்கிருமிகளின் இந்தியத் திரிபுகளே அதிகமாகப் பரவியிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்