பிரேசிலில் ஜனாதிபதியின் கொரோனாத்தொற்று அலட்சியத்துக்கெதிராக மக்கள் பொங்கியெழுகிறார்கள்.
பிரேசிலின் பல பாகங்களிலும் சனியன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி ஜனாதிபதி பொல்சனாரோவுக்குத் தமது அதிருப்தியைத் தெரிவித்தார்கள். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 461,000 பேர் கொவிட் 19 ஆல் மரணமடைந்தும் ஜனாதிபதி தொற்றுகள் பரவாதிருக்கும் நடவடிக்கைகளை எடுக்காமல், எடுக்கும் மாநில ஆளுனர்களுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்.
பிரேசிலின் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் செனட் சபைக்கு வெளியேயும் வேறு இடங்களிலும் முகக்கவசமணிந்தபடி பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் ஊர்வலங்களில் பங்கெடுத்தார்கள். “ஒழிந்து போ பொல்சனாரோ”, “இன அழிப்பை நிறுத்து,” போன்ற கோஷங்களை அவர்கள் எழுப்பினார்கள். நடாத்தப்பட்ட கருத்துக் கணிப்பீட்டில் 49 % பேர் அவர் பதவி விலகவேண்டுமென்கிறார்கள், 46 % விலகத் தேவையில்லை என்கிறார்கள். மருத்துவ சேவையினர் நீண்ட காலமாகவே கேட்டுவரும் முழு நகர அடைப்புக்களை அவர் மறுத்தே வருகிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்