இந்த வருடத்தில் 45 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கத்துடன் கதவுகளைத் திறக்கும் ஸ்பெய்ன்.

சுற்றுலாப் பயணிகள் தனது நாட்டில் செலவழிக்கும் பணம் நாட்டின் பொருளாதாரத்தின் கணிசமான அளவாக இருக்கும் நாடுகளிலொன்று ஸ்பெய்ன். எனவே அந்த நாடு கொரோனாத் தொற்றுக்களினால் பொருளாதாரத்தில் பெரும்பளவில் பாடிக்கப்பட்டது என்று குறிப்பிடத் தேவையில்லை. தனது நாடு உலகின் சுற்றுலாப் பயணிகளுக்கெல்லாம் திறந்திருப்பதாக ஸ்பெய்ன் அறிவித்திருக்கிறது.

அங்கீகரிக்கப்பட்ட இரண்டு கொவிட் 19 தடுப்பு மருந்துகள் பெற்றவர்கள், தமக்குத் தொற்று இல்லை என்று சான்றிதழ் காண்பிக்கக்கூடியவர்கள், தம்மிடம் நோய்ப் பாதுகாப்பு ஏற்பட்டிருப்பதை நிரூபிக்கும் சான்றிதழ்களைக் கொண்டிருப்பவர்களை ஸ்பெய்ன் வரவேற்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

2019 இல் ஸ்பெய்ன் 83.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவேற்றிருந்தது. கடந்த வருடம் கொரோனாத் தொற்றுக்களைத் தடுக்க நாடெங்கும் கடும் கட்டுப்பாடுகள் போடப்பட்டிருந்தது.  அத்துறை பெரும் வீழ்ச்சியடைந்திருந்தது. இவ்வருடம் ஏபரல் வரை 1.8 மில்லியன் சுற்றுலாப் பயணிகளே அங்கே வந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. அவர்களுடைய 2021 எதிர்பார்ப்பான 45 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் என்ற தொகை வெற்றிபெறுவது சந்தேகமே என்று கணிக்கப்படுகிறது.

ஸ்பெய்னுக்குச் சுற்றுலாச் செல்லும் பயணிகளில் கணிசமானவர்கள் பிரிட்டர்களாகும். பிரிட்டன் தற்போது தனது நாட்டவர்களை ஸ்பெய்னுக்கும் போகவேண்டாமென்று தடை போட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

https://vetrinadai.com/news/travel-list-red-uk/

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *