ஒலிம்பிக்ஸ் ஆரம்ப நிகழ்ச்சியின் இயக்குனர் நிகழ்ச்சி நடக்க ஒரு நாளிருக்கும்போது வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

யூதர்களின் பேரழிவு பற்றி 23 வருடங்களுக்கு முன்னர் கெந்தாரோ கொபயாஷி செய்த பகிடியொன்று இணையத்தளங்களில் இரவோடிரவாக முளைத்ததன் விளைவாக அவர் உடனடியாகத் தனது பொறுப்புக்களிலிருந்து விலக்கப்பட்டிருக்கிறார். “அவர் தனது படைப்பொன்றில் சரித்திரத்தின் வேதனையான விடயம்பற்றி எள்ளி நகையாடியிருப்பது தெரியவந்து பலரை மனம் வருந்தச் செய்திருக்க்கிறது,” என்று அவர் நீக்கப்பட்டதற்கான காரணத்தைத் தெரிவித்தார் அவ்விளையாட்டு நிகழ்ச்சிகளின் தலைவர் ஷெய்க்கோ ஷஷிமோட்டோ

தனது நடத்தைக்காக மன்னிப்புக்கு கேட்டுக்கொண்ட கொபயாஷி டோக்கியோவின் நாடக மேடை நிகழ்ச்சிகளில் பிரபலமானவராகும். “ஒரு காலத்தில் நான் பிரபலமாக இல்லாதபோது, மக்களின் கவனத்தைக் கவர்வதற்காக விரும்பத்தகாத விடயங்களைக் குறிப்பிட்டு நகைச்சுவை செய்திருக்கிறேன்,” என்று அவர் குறிப்பிட்டார்.

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் நிகழ்ச்சியின் முக்கியத்துவர்கள் விரும்பத்தகாத விடயங்கள் பற்றிப் பேசி, நடந்து பதவியிலிருந்து விலகுவது இது முதல் தடவையல்ல. இதற்கு முன்னரும் பெண்கள் பற்றிய இழிவான கருத்துக்கள் சொல்லிப் பதவியிலிருந்து சிலர் தூக்கியெறியப்பட்டிருக்கிறார்கள்.

https://vetrinadai.com/news/naomi-hiroshi/

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *