வடமராட்சியிலிருந்து புகழ்பெற்ற ஆயுர்வேத மருத்துவர் டொக்டர் வேலும்மயில் அவர்கள்

வடமராட்சியின் அல்வாய் எனும் ஊரிலிருந்து மிகப்பிரபல்யம் வாய்ந்த ஆயுர்வேத வைத்தியராகத் திகழ்ந்தவர் டொக்டர் வேலும் மயில் அவர்கள். அவரின் மறைவுக்கு பலரும் தங்கள் அஞ்சலிகளை தெரிவித்துவருகின்றனர்.

ஆங்கில மருத்துவம் மீதான அதீத நம்பிக்கை , அதுவின்றித் தீர்வில்லை என்ற கருத்து மிகுந்த எம் சமூக மட்டத்தில் ஆயுர்வேத மருத்துவத்தால் பலருக்கும்   நிம்மதி வாழ்வைக்கொடுத்த பெருமகனாக வாழ்ந்தவர் டொக்டர் வேலும்மயில் அவர்கள்.

அல்வாய் குமிழடி பிள்ளையார் ஆலய வளாகத்தை அண்மித்த இடத்தில் வாழ்ந்த டொக்டர் .வேலும்மயில் அவர்கள் அங்கேயே நோயாளர்களை சந்திக்கக்கூடிய மருத்துவ அறைப்பகுதியையும் அமைத்திருந்தவர். இளவயதிலிருந்து முதியவர்கள் வரை  பலரும் அவரது மருத்துவ சேவையைப்பெற அந்த இடத்துக்கு வந்து சென்றிருக்கிறார்கள் என்பதை மறுக்கமுடியாது.நோயார்களாக அவரை நாடிவந்த பலரின் குடும்ப சூழ்நிலைகளைக் கரைத்தில்கொண்டு இலவசமாகக்கூட தனு சேவைகளைச்செய்து தன்னலமற்று வாழ்ந்த ஒரு அன்புக்குரியவர் ஆவார்.சமூக வலைத்தளத்தில் அவரின் இழப்பு பற்றிய அஞ்சலிக்குறிப்புகள்  பகிரப்பட்டுவருகின்றமைக்கு அது ஒரு சான்று ஆகும்.

அத்துடன் தான் வாழ்ந்த ஊரின் சமூகப்பணிகளிலும் தன்னாலான பணிகளை இயன்றவரை முன்னெடுத்தவர்.

சமூக சேவகர் மருத்துவர் சேவகர் டொக்டர் வேலும்மயில் அவர்களுக்கு வெற்றிநடை இணையம் தன் அஞ்சலிகளை பதிவு செய்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *