“செப்டெம்பர் 11 தாக்குதல் ஒஸாமா பின் லாடினால் இயக்கப்பட்டது என்பதற்கு எவ்விதச் சான்றும் கிடையாது!”
“ஆப்கானிஸ்தானைத் தாக்குவதற்கு அமெரிக்காவுக்கு எந்தவிதக் காரணங்களும் கிடையாது, ஒஸாமா பின் லேடன் 2001 இல் அமெரிகாவை நோக்கி நடந்த தாக்குதல்களில் ஈடுபட்டதற்கான சான்றுகளெதுவும் காட்டப்படவில்லை,” என்று தலிபான் இயக்கங்களின் ஊடகத் தொடர்பாளர் ஸபியுல்லா முஜாகீத் அமெரிக்க தொலைக்காட்சியொன்றுக்குக் கொடுத்த பேட்டியொன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.
பேட்டியில் முஜாகித்திடம் “அந்தத் தாக்குதலில் பின் லேடனின் ஈடுபாடுகளின் விபரங்கள் வெளியிடப்பட்டதால்தானே உலகம் முழுவதும் தேடப்படும் குற்றவாளியாக அவர் ஆகினார்,” என்று சுட்டிக்காட்டியதுக்குப் பதிலாக, “பின் லேடின் மீது குற்றஞ்சாட்டப்பட்டபோது அவர் ஆப்கானிஸ்தானில் இருந்தார் என்பது உண்மை. ஆனால், அவர் அத்தாக்குதலைப் பின்னாலிருந்து இயக்கினார் என்பதற்கான ஆதாரங்கள் ஏதுமில்லை. இனிமேல், வேறெவரையும் ஆப்கானிஸ்தான் மண்ணிலிருந்து இன்னொரு நாட்டவரை எதிர்த்து இயங்க அனுமதிக்க மாட்டோம் என்று உறுதி கொடுத்திருக்கிறோம்,” என்றார்.
பேட்டி கண்டவர் தொடர்ந்தும் முஜாகிதிடம் “தலிபான்களுக்கு அத்தாக்குதலில் பொறுப்பில்லையென்று” நெருக்கியபோது, “பின் லேடினைக் காரணம் காட்டி ஆப்கானிஸ்தானைத் தாக்கினார்கள்.” என்றார் பதிலாக.
சாள்ஸ் ஜெ. போமன்