பிலிப்பைன்ஸ் தேசிய விமான நிறுவனம் திவால் நிலைக்காக விண்ணப்பித்திருக்கிறது.

கொரோனாத் தொற்றுக்களினால் உலகில் மிகவும் பாதிக்கப்பட்ட துறையொன்று போக்குவரத்துத் துறையாகும். விமானப் பயணங்கள் 90 % குறைந்துவிட்டிருப்பதால் உலகின் பல விமான நிறுவனங்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. பிலிப்பைன்ஸ் ஏர்லைன்ஸ் தனக்கு ஏற்பட்டிருக்கும் 2 பில்லியன் டொலர்கள் கடனை அடைக்கவே திவாலாகும் முடிவை எடுத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.

அதேசமயம், விமான நிறுவனம் தனது மொத்த விமானங்களில் 25 % ஐக் குறைத்து தனது அளவைச் சிறியதாக்கிப் புதிய முதலீடுகளுடன் மேலுமொரு நிறுவனத்தை ஸ்தாபிக்கும்.

தனது மொத்த சேவைகளில் 8,000 ஐ பிலிப்பைன்ஸ் ஏர்லைன்ஸ் கொரோனாக்கால நிலபரத்தில் ரத்து செய்தது. விளைவாக சுமார் 2,300 தொழிலாளிகள் வேலையிலிருந்து நிறுத்தப்பட்டார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *