தோல்வியின் கனி தான் வெற்றி

அறியாமை இருளை அகற்று

அறிவு எடுத்து சுழற்று

முயலாமையை விரட்டு—

உன் மூல சக்தியை திரட்டு🔥 🔥

வெற்றி என்பது தோல்வியின் கனி தான்

தோல்வியை வென்று பார் அதன் சுவை தனி தான்🔥 🔥

உனக்குள் இருக்கும் அதிசயம் பிறக்க

 உன்னால் மட்டுமே முடியும் அதை திறக்க—!  

போராடி பார் மீள உயிர்க்க

நீராடுவாய் உலகம் வியக்க

எழுதுவது : சுப பாலா