திருமணம் செய்தார் மலாலா யூஷப்சாய்| பிரிட்டனில் நடந்தது

அமைதிக்கான நோபல் பரிசு வெற்றிபெற்ற பெண்களுக்கான மனித உரிமை செயற்பாட்டாளராக அறியப்பெற்ற பாகிஸ்தானை சேர்ந்த மலாலா யூஷப்சாயுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. பிரிட்டனில் பேர்மிங்காம் Birmingham நகரத்தில் இவரின் திருமணம் இடம்பெற்றுள்ளது. அசர் மாலிக் என்ற மணமகனை இஸ்லாமியமுறைப்படி மலாலா யூஷப்சாய் திருமணம் முடித்துள்ளார்.

தம் திருமண நாள் தமது வாழ்வின் ஒரு பொன்னான நாள் என்று மலாலா தனது ருவிற்றர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா, தமது பள்ளிக் காலத்திலிருந்தே பெண்கள் கல்விக்கான செயல்பாட்டாளராக இருந்தவர். மலாலா 2012ஆம் ஆண்டு தாலிபான் தீவிரவாதிகளால் தலையில் சுடப்பட்டு பின்னர் பிரிட்டனுக்கு குடிபெயர்ந்தவர்.

தொடர்சியாக மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்துவரும் மலாலாவுக்கு அவரது 17வது வயதில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. சரித்திரத்தில் நோபல் பரிசை மிக குறைந்த வயதில் பெற்ற கௌரவம் மலாலாவுக்குத்தான் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.