ஐரோப்பாவில் மருந்துகளைப் பாவிப்புக்கு அனுமதிக்கும் அமைப்பு சிறார்களுக்குக் கொடுக்கப்படலாமா என்று ஆராய்கிறது.

6 – 11 வயதுப் பிள்ளைகளுக்குக் கொரோனாத் தடுப்பு மருந்துகள் கொடுப்பது விரைவில் ஐரோப்பாவில் ஆரம்பிக்கப்படும். பின்லாந்தில் 12 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொவிட் 19 தடுப்பு மருந்து கொடுப்பது தீர்மானிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.

மொடர்னா நிறுவனத்தின் ஸ்பைக்வாக்ஸ் சிறுவயதினருக்குக் கொடுக்கப்படலாமா என்ற ஆராய்வை ஐரோப்பாவின் மருந்துகளை அனுமதிக்கும் அமைப்பு ஆராய்ந்து வருகிறது. அதன் முடிவு வெளிவர 2 மாதமாகலாம். அதற்கு முதலே டிசம்பரில் பைசர் நிறுவனத்தின் தடுப்பு மருந்துகளை [கொமிர்னாட்டி] அவ்வயதினருக்குக் கொடுக்கலாமா என்ற முடிவு எடுக்கப்படும்.

அமெரிக்காவில் 5 – 11 வயதினருக்கு ஏற்கனவே கொவிட் 19 தடுப்பு மருந்து கொடுக்கப்படுகிறது.

ஸ்பைக்வாக்ஸ் தடுப்பு மருந்தை 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொடுக்க பிரான்ஸ், ஜேர்மனி, பின்லாந்து ஆகிய நாடுகள் ஏற்கனவே முடிவுசெய்துவிட்டன. அந்த மருந்து அச்சிறார்களுக்கு இருதயத் தசைநாரைப் பாதிக்க மிகச் சிறிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக அந்த நாடுகள் குறிப்பிடுகின்றன. எனவே அவர்கள் சிறார்களுக்கு கொமிர்னாட்டி தடுப்பு மருந்தை மட்டுமே கொடுப்பதென்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

ஜேர்மனியில் கர்ப்பிணிகளுக்கும் கொமிர்னாட்டி தடுப்பு மருந்தை மட்டுமே கொடுக்கும்படி சிபார்சு செய்யப்பட்டிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்