இஸ்லாமிய விவகாரங்களின் தலைமைப் பதவியைத் தனக்குக் கீழ் கொண்டுவந்தார் பஷார் அல்- ஆஸாத்.

சிரிய ஜனாதிபதி தனது புதிய நகர்வாக நாட்டின் இஸ்லாமிய அமைப்பின் தலைமையை சிரியாவின் மதங்களுக்கான அமைச்சின் கீழ் கொண்டுவந்திருக்கிறார். இனிமேல் நாட்டின் முப்தி இஸ்லாமின் முக்கிய விடயங்களைப் பற்றி முடிவுசெய்ய முடியாது. மதங்கள் பற்றிய விடயங்களை முடிவுசெய்யும் அரசின் அமைச்சின் கீழுள்ள இஸ்லாத்துக்கான திணைக்களமே அந்த முடிவுகளை எடுக்கும் என்று அரசின் ஊடகம் தெரிவித்திருக்கிறது.

முதல் கட்டமாகவே சிரியாவின் இஸ்லாமியத் தலைமையான முப்தியின் தலைமைக்காலத்தை 2018 இல் அல்-ஆசாத் மூன்று வருடங்களாகக் கட்டுப்படுத்திவிட்டார். அதற்கு முதல் ஒரு முப்தியின் தலைமைக்காலத்துக்கு எல்லை கிடையாது. அடுத்தபடியாக இப்போது முப்தியை வீட்டுக்கனுப்பிவிட்டு சிரியாவின் மதங்கள் விவகார அமைச்சின் கீழ் இஸ்லாத்தின் தலைமை கொண்டுவரப்பட்டிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்