நிலவு தேவதை

வானத்தில் இரவு நேரத்தில் பயமின்றி உலா வருகிறாள் அழகு தேவதை

நட்சத்திரங்கள் உன் தோழியரோ
உன் அழகைக் கண்டு கண் சிமிட்டுகிறார்களே குறும்புக்கார நட்சத்திரங்கள்!


உன் முகத்தில் என்ன கருப்பு ஒ கண் திருஷ்டி படுமென அன்னை வைத்தாரோ!


நிலவே நான் எங்கு சென்றாலும் என்னுடன் வருகிறாயே
எட்டி நடந்தால் ஓடி வருகிறாய்
என்னை உனக்கு மிகவும் பிடிக்குமோ
நான் உன்னை விட்டு செல்ல மாட்டேன்

நீயும் என்னுடன் வீடு வரை வருகிறாயா!
உன்னுடன் உரையாட தோழிகள்
வந்து விட்டனரோ


ஓ..அது தான் மைகங்களுக்கு இடையே ஒளிந்து கொண்டாயோ!


மேகச் சேலையைக் கொண்டு அடிக்கடி முகம் மறைத்துக் கொள்கிறாயே யாரைக் கண்டு வெட்கம் உனக்கு நிலாப் பெண்ணே!


வானத்தில் இரவு நேரத்தில் வெண்பளிங்கு சேலை உடுத்தி யாருக்காக காத்திருக்கிறாய்!


நிலவே நீயும் தேய்ந்து வளர்கிறாய் நீயும் சலிப்பு ஏற்படாமல் சந்தஃஷமாய் வாழ்கிறாய் எங்களைப் போலவே!


உனக்கு பாட்டி வடை சுட்டு தருகிறாரோ என்னுடன் வந்தால் என் தாயின் கைவண்ணத்தில் அறுசுவை உண்ணலாமே வருகிறாயா!

எழுதுவது ; விஜயலட்சுமி