எல்லை வரிகளற்ற உலகின் மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம் (RCEP) இன்று முதல் அமுலுக்கு வருகிறது.

கைச்சாத்திட்டு ஏற்றுக்கொண்ட 10 உலக நாடுகளுக்கிடையேயான வர்த்தக ஒப்பந்தம் இவ்வருடத்தின் முதல் நாள் முதல் அமுலுக்கு வருகிறது. இதன் மூலம் கையெழுத்திட்டவர்களுக்கு இடையேயான வர்த்தகப் பரிமாறல்களில் ஏற்றுமதி, இறக்குமதி வரிகள் தவிர்க்கப்படும். அந்த நாடுகளின் சுமார் 92 விகிதமான பொருட்களை இவ்வர்த்தக ஒப்பந்தம் கையாள்கிறது.

Regional Comprehensive Economic Partnership என்றழைக்கப்படும் இந்த ஒப்பந்தத்தில் முதல் கட்டமாக ஆஸ்ரேலியா, ஜப்பான், கம்போடியா, சீனா, லாவோஸ், புரூனேய், தாய்லாந்து, நியூசிலாந்து, வியட்நாம், சிங்கப்பூர் ஆகிய நாடுகள் இணைகின்றன. மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா ஆகிய நாடுகள் அடுத்த கட்டத்தில் சேர்ந்துகொள்ளும். தென்கொரியா பெப்ரவரி 01 ம் திகதியிலிருந்து இணைந்துகொள்ளும்.

இவ்வொப்பந்தத்தில் 15 நாடுகள் இணைந்திருக்கும். 15 வது நாடான மியான்மாரை அரசியல் நிலபரங்களுக்காகத் தற்போது சேர்த்துக்கொள்வதை மற்றைய நாடுகள் விரும்பவில்லை. 

சாள்ஸ் ஜெ. போமன்