தமிழும் அன்னையும்
அன்னைக்கும் அவள் மொழிந்த தமிழுக்கும்…..
இவ்வுலகில் ஈடு இணை ஏதுமில்லையே…..
உரக்கச் சொல்லிட நாவும் தேனூற…..
எடுத்தியம்ப உள்ளுக்குள் களிப்புக் கூடிட…..
ஒப்பற்ற இவ்விரண்டும் உணர்வினில் கலந்ததே…..
கங்கை முதல் காவிரி வரையிலும்…..
சங்கத் தமிழின் பெருமையை விளக்கி…..
தமிழின் இனிமையை தாய் உரைத்திட…..
நல்லறமும் நாகரிகமும் நான் கற்றிட…..
பழந்தமிழரின் பெருமையை பாருலகம் போற்றிட……
மறவாமல் பறைச்சாற்றி எம் தமிழை…..
வளர்த்திடும் தலையாயக் கடமை என்னுடையதே……
எழுதுவது : வேதகனி அருண்குமார்