உலக நாடுகளில் வீதி விபத்துக்களில் அதிகம் பேர் இறப்பு இந்தியாவிலேயே என்கின்றன புள்ளிவிபரங்கள்.
கடைசியாக வெளியிடப்பட்டிருக்கும் வீதி விபத்துக்கள் பற்றிய புள்ளிவிபரங்களில் இந்தியாவின் இடம் மிகவும் விசனத்துக்குரியதாக இருப்பதாக நாட்டின் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கொத்காரி ராஜ்ய சபையில் தெரிவித்திருக்கிறார். அதிகமான விபத்துக்கள் நடக்கும் நாடு என்ற பட்டியலில் இந்தியா 3 வது இடத்தையும், அதிகம் பேர் வீதி விபத்தில் இறந்துபோகிறவர்கள் பட்டியலில் இந்தியா முதலாவது இடத்திலும் இருப்பதாக World Road Statistics புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவருவதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
2020 இல் வீதி விபத்துக்களில் இறந்தவர்களில் சுமார் 70 % 18 – 45 வயது இடைவெளிக்குள் உள்ளவர்கள் என்றும் அவர் தெரிவித்தார். நாட்டின் வீதிகளின் மோசமான நிலைமையே பெரும்பான்மையான வீதி விபத்துக்களுக்குக் காரணம் என்று எதிர்க்கட்சியினர் அரசைச் சாடினார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்