65 வயதுக்குட்பட்ட தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒரு மில்லியன் பேர் மட்டுமே ஹஜ் யாத்திரைக்குப் போகலாம்.
இஸ்லாமியர் ஒவ்வொருவரும் தனது வாழ்நாளில் ஒரு தடவையாவது நிறைவேற்ற வேண்டிய கடமையான ஹஜ் யாத்திரைக்கான கால நெருங்கி வருகிறது. இவ்வருட யாத்திரைக்குச் சவூதி அரேபியா அனுமதிக்கப் போவது ஒரு மில்லியன் பேரை மட்டுமே என்று அறிவித்திருக்கிறது. இந்த எண்ணிக்கை உள்நாட்டு, வெளிநாட்டு மொத்த ஹஜ் யாத்திரையாளர்களுக்கானதாகும்.
கொவிட் 19 கட்டுப்பாடுகளையும் கணக்கில் கொண்டு 65 வயதுக்குட்பட்டவர்கள், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே ஹஜ் யாத்திரைக்காக வரலாம் என்று அறிவித்திருக்கிறது சவூதி அரேபிய அரசு. அத்துடன் வெளிநாட்டிலிருந்து யாத்திரைக்காக வருகிறவர்கள் விமானப் பயணத்துக்கு 72 மணி நேரத்துக்கு முன்னர் அவர்களுக்கு கொரோனாத் தொற்று இல்லை என்று நிரூபிக்கும் சான்றிதழையும் தம்முடன் கொண்டுவர வேண்டும்.
கொவிட் 19 பெருந்தொற்றுக்களுக்கு முன்னர் சுமார் 2.5 மில்லியன் பேர் ஹஜ் யாத்திரையில் பங்கெடுப்பதுண்டு. அது 2020 இல் ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டது. 2021 இல் சில ஆயிரம் பேர் ஹஜ் யாத்திரைக்காக அனுமதிக்கப்பட்டார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்