இலக்கு |குட்டிக்கதை

ஒரு_யுத்தத்தில் எதிரி நாட்டு இளவரசனை உயிரோடு பிடித்து இராஜாவின் முன்பு நிறுத்தினர்.

இளவரசன் தன் உயிருக்காகக் கெஞ்சி மன்றாடி தன்னை மன்னிக்கும்படியாக கேட்டுக்கொண்டான்.

“அதற்க்கு ஒரு நிபந்தனை இருக்கிறது” என்றார் வெற்றி பெற்ற ராஜா .

“விளிம்புவரை தண்ணீர் நிரப்பப்பட்ட பாத்திரம் ஒன்று உனது கையில் தரப்படும்.”

அது முக்கிய சாலை ஒன்றின் வழியாக ஒரு சொட்டு தண்ணீர் கூட கீழே சிந்தாமல் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஒரு மையில் தூரம் கொண்டு செல்ல வேண்டும்.

கூடவே உருவிய பட்டையத்தோடு எனது வீரர்கள்வந்துக்கொண்டு இருப்பார்கள்.

ஒருதுளி தண்ணீர் கீழே கொட்டினாலும் கூட அவர்களின் வாள் உன் தலையைச் சீவிவிடும்.

வெற்றியோடு முடித்துவிட்டால் விடுதலை”

என்று பேரரசர் தனது நிபந்தனையை விதித்தார்.

குறிப்பிட்ட நேரம் வந்தது.

இலட்சக்கணக்கான மக்கள் அந்த சாலையின் இரு பகுதிகளிலும் குழுமியிருந்தனர்.

போர் வீரர்கள் சாலையைஒழுங்கு செய்து கொடுத்தனர்.

பேரரசர் முன்னிலையில் முழுவதும் தண்ணீர் நிரப்பிய பாத்திரம் இளவரசனின் கைகளில் கொடுக்கப்பட்டது.

ஒரு பகுதியில் இருந்த மக்கள் இளவரசனை ஊக்குவித்து உற்ச்சாகப் படுத்தினர்.

மறுபக்கத்தில் இருந்தவர்களோ கேலியும் பரிகாசமும் செய்து கூச்சலிட்டனர்.

இளவரசனின் இருபுறமும் வீரர்கள் உருவிய வாளோடு தண்ணீர் சிந்துமானால் வெட்டும்படி கவனித்துக்கொண்டிருந்தனர்.

பாத்திரத்தை உறுதியாய் பிடித்துக்கொண்டான் இளவரசன் நடக்க சுற்றுப்புறத்திலிருந்து கூச்சலும், பரிகாசமும்,ஆர்ப்பாட்டங்களும் கேட்டுக்கொண்டே இருந்தது.

எனினும் எதையும் பொருட்படுத்தாதபடி தண்ணீரிலே முழு கவனமும் வைத்து ஓட்டத்தை வெற்றியோடு ஓடி முடித்தான் இளவரசன் .

இளவரசனை பாராட்டிய பேரரசர்

இளவரசனே உன்னை கேலி செய்தவர்களுக்கு நீ தண்டனை வழங்கலாம்.

உன்னை உற்ச்சாக படுத்தியவர்களுக்கு நன்றி சொல்லலாம்.

அவர்களை கவனித்து வைத்திருக்கிறாயா என்று கேட்டார்.?

என்னை போற்றுபவர்களை நான் கவனிக்கவில்லை,

தூற்றுபவர்களையும் நான் பார்க்கவில்லை.

“எனது கவனமெல்லாம் தண்ணீரில் அல்லவா இருந்தது.”

விடுதலையோடு கூட அரசர் ஒரு ஆலோசனை தந்தார்.

இளவரசனே

பாத்திரத்தில் உள்ள தண்ணீர் தான் உன் சரீரத்தில் உள்ள உயிர்

வாழும் நாட்களிலே கண்ணும் கருத்துமாக இருந்து கடைசியில் அதை போற்றிபாதுகாக்க
வேண்டும்.

போற்றுவோரைக் கண்டுபெருமை கொள்ளாமல்

தூற்றுவோரைக்கண்டு சோர்ந்துப் போகாமமல் வாழ்வில் கவனம் வைத்து முன்னேற வேண்டும் என்றார்.

எழுதுவது : பால. ரமேஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *