அமெரிக்காவின் செனட் சபையை வென்றெடுக்கும் நிலையில் ஜோ பைடன் கட்சி.
நவம்பர் 08 ம் திகதி நடந்த அமெரிக்காவின் தேர்தல்களின் முடிவுகள் சில நத்தை வேகத்தில் வெளியாகித் தொடர்ந்தும் எவரிடம் போகும் அந்தப் பாராளுமன்றச் சபை என்ற பரபரப்பை உயிருடன் வைத்திருக்கிறது. பிரதிநிதிகள் சபைத் தேர்தல்கள் பற்றிய கடைசிக்கட்ட முடிவுகளும் இன்னும் வெளியாகி முடியவில்லை. அங்கே சபையின் பெரும்பான்மையை அடைய 218 இடங்கள் வேண்டுமென்ற நிலையில் ரிபப்ளிகன் கட்சியினர் ஏற்கனவே 211 இடங்களை வென்றெடுத்திருக்கிறார்கள்.
செனட் சபையின் தேர்தல்களில் கடைசியாக வெளியாகியிருக்கும் அரிசோனா மாநிலத்தை டெமொகிரடிக் கட்சியினரின் வேட்பாளரான மார்க் கெல்லியே வெற்றிபெற்றார் என்கிறது. அவர் ஏற்கனவே பதவியிலிருக்கும் செனட்டர் ஆகும். அவர் நான்கு தடவை விண்வெளிக்குப் பயணித்த விண்வெளி வீரராகும். 2011 ம் ஆண்டில் நடந்த கொலை முயற்சியொன்றில் தலையில் துப்பாக்கிச்சூட்டை எதிர்கொண்டார். உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த அவரது மருத்துவமனைச் சிகிச்சைக் காலம் நாடெங்கும் பெரும் கவனத்தை ஈர்த்தது. அந்தக் கொலை முயற்சியில் 6 பேர் கொல்லப்பட்டார்கள், மேலும் 13 பேர் காயமடைந்தார்கள்.
மார்க் கெல்லியின் வெற்றியை அடுத்து இரண்டு கட்சியினரும் தலா 49 இடங்களைச் செனட் சபைகளில் கைப்பற்றியிருக்கிறார்கள். மேலுமிருக்கும் இரண்டு இடங்களான நிவாடா, ஜியோர்ஜியா ஆகியவற்றில் இரண்டில் ஒன்றை வென்றால் டெமொகிரடிக் கட்சியினரே செனட்டைக் கைப்பற்றுவார்கள். அரிசோனாவில் கெல்லிக்கெதிராக மோதிய பிளேக் மாஸ்டர்ஸ் மீண்டும் பதவிக்கு வரும் ஆசையுடன் அலையும் டிரம்ப்பின் பலத்தை ஆதரவைப் பெற்றிருந்தார். டிரம்ப் போலவே அவரும் 2020 தேர்தல்களில் ரிபப்ளிகன் கட்சியிடமிருந்து ஆட்சி களவாடப்பட்டது என்று குறிப்பிட்டு வந்தவராகும்.
நிவாடாத் தேர்தல் வாக்குகள் எண்ணுதல் இன்னும் முடியவில்லை. எண்ணப்படும் வாக்குகள் தபாலில் அனுப்பப்பட்ட வாக்குகளாகும். பொதுவாட்கத் தேர்தலுக்கு முன்னரே தபாலில் வாக்களிப்பவர்கள் டெமொகிரடிக் கட்சிக்கே தமது வாக்குகளை போட்டிருந்தார்கள். கதரின் கொர்டேஸ் மாஸ்டோ அங்கே 48.4 % விகித வாக்குகளுடன் இதுவரை 48.5 % வாக்குகளால் முன்னணியிலிருக்கும் ரிபப்ளிகன் கட்சி வேட்பாளருடன் மோதினார்.
ஜியோர்ஜியா மா நிலத்தில் வெல்பவர் 50 விகிதத்துக்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றவேண்டும் என்ற நிலையில் அதை எவரும் அடையாததால் டிசம்பரில் மீண்டும் தேர்தல் நடக்கவிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்