ஐரோப்பிய ஒன்றியத் தலையீட்டின் பின்னரும் செர்பிய – கொசோவோ வாகனப் பதிவு முறுகல் மேலும் வலுக்கிறது.
பால்கன் நாடான செர்பியா தனது நாட்டின் வாழும் செர்பர்கள் தமது வாகனங்களில் கொசோவோச் சின்னம் பதித்த வாகனப் பதிவு அட்டை இல்லையெனில் அவர்கள் 22 ம் திகதி முதல் தண்டம் கட்ட வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கிறது. கொசோவோ பிரதமர் அர்பின் குர்த்தி, செர்பிய ஜனாதிபதி அலெக்சாந்தர் வூசிச் ஆகியோரை பிரசல்ஸில் சந்தித்து ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் ஜோசப் பொரல் நடத்திய பேச்சுவார்த்தைகள் பலனெதையும் தரவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
வடக்கு கொசோவாவில் வாழும் செர்பர்கள் ஏற்கனவே கொசோவோ அரசின் எதிர்த்து தமது அரச பதவிகளிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள். சுமார் 600 செர்பியப் பொலீசார் தமது பதவிகளைத் துறந்திருக்கிறார்கள். செர்பிய நீதிபதிகள், அரச வழக்கறிஞர்களும் பதவியிலிருந்து விலகியிருக்கிறாஅர்கள்.
கொசோவோ என்ற நாட்டை ஏற்றுக்கொள்ளாத செர்பியாவின் கட்டுப்பாட்டில் தான் உண்மையில் வடக்கு சொசோவோ தொடர்ந்தும் இருக்கிறது. அங்கே கொசோவோவின் அதிரடிப் படையினர் அனுப்பப்பட்டிருக்கிறார்கள். நாட்டோ அமைப்பு, ஐரோப்பிய ஒன்றியத்தின் அவதானிகளும் அங்கே போர் நடந்து முடிந்ததிலிருந்தே பணியாற்றுகிறார்கள். நிலைமை கட்டுமீறிப் போவதைத் தடுக்க நிறுத்தப்பட்டிருக்கும் அவர்களுக்கு ஆயுதப் பரிமாறல்கள் நடப்பின் அவற்றுக்குள் குறுக்கிடத் தேவையான அதிகாரங்கள் கொடுக்கப்படவில்லை.
செர்பியா, கொசோவோ தலைவர்களுடன் பொரல் நடத்திய பேச்சுவார்த்தையின் சமயத்தில் கொசோவா இன்று ஆரம்பிக்கவிருக்கும் நடவடிக்கையை நிறுத்தும்படி பொரல் கேட்டதை கொசோவா ஏற்றுக்கொள்ளவில்லை. செர்பியாவிடம் புதிய வாகனங்கள் பதிவுகள் செய்தலை நிறுத்தும்படி கேட்டதற்கு அவர்கள் ஒத்துக்கொண்டிருக்கின்றார்கள்.
பேச்சுவாத்தைகளின் பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய ஜோசப் பொரல் தான் முன்வைத்த சமாதானத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள கொசோவோ மறுத்திருப்பதைக் குறிப்பிட்டார். இந்த நிலைமையில் இரண்டு தரப்பாரும் மோதிக்கொள்ளாமல் மக்களின் உண்மையான விருப்பத்தைப் புரிந்துகொண்டு இருவரும் ஒத்துக்கொள்ளக் கூடிய வழியொன்றைத் தீர்வாக முன்வைக்கும்படி கேட்டுக்கொண்டார்.
சாள்ஸ் ஜெ. போமன்