மூன்று ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்குத் தமது வானத்தில் இடமளிக்காததால் லவ்ரோவின் செர்பியா விஜயம் ரத்து.
ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர் செர்கேய் லவ்ரோவின் பல்கேரிய விஜயம் ரத்து செய்யப்பட்டது. அதன் காரணம் செர்பியாவின் பக்கத்து பால்கன் நாடுகளான வட மசடோனியா, மொன்ரிநீக்ரோ, பல்கேரியா ஆகியவை லவ்ரோவ் தமது வானத்தில் பறக்க இடமளிக்க மறுத்து விட்டதாகும்.
மேற்கு நாடுகளால் முடக்கங்களுக்கு உள்ளாக்கப்பட்டவர்களில் ரஷ்ய வெளிவிவகார அமைச்சரும் ஒருவர். அவர் இன்று திங்களன்று செர்பியாவில் பேச்சுவார்த்தைகளுக்காக விஜயம் செய்யவிருந்தார். ஐரோப்பிய நாடுகள் எல்லோரும் ரஷ்யாவுடன் தமது உறவுகளைத் துண்டித்துக்கொண்டிருக்கின்றன. செர்பியா மட்டுமே ரஷ்யாவுடன் தொடர்ந்து உறவுகளைப் பேணி அங்கிருந்து எரிவாயுக் கொள்வனவையும் செய்து வருகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்
