லாஸ் வேகாஸ் நகரின் “எல்விஸ் திருமணங்கள்” நிறுத்தப்படவேண்டும் என்கிறது “எல்விஸ்” உரிமையை வைத்திருக்கும் நிறுவனம்.

உலகப் புகழ்பெற்ற கலைஞர் எல்விஸ் பிரெஸ்லி மறைந்து பல தசாப்தங்கள் ஆகிவிட்டாலும் அவரது புகழ் மறையவில்லை. இசை, நடனம் மட்டுமல்ல அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் அவரது பெயரில் நடாத்தப்படும் திருமணங்களும் பெரும் பிரசித்தி பெற்றவை. நகரின் “எல்விஸ் திருமண கலாச்சாரத்தின்” நிழலில் பல நிறுவனங்கள் செயற்பட்டு வருகின்றன.

லாஸ் வேகாஸ் நகரில் எல்விஸ் திருமணங்களை நடத்திவரும் நிறுவனங்களுக்கு எல்விஸ் பிரெஸ்லியின் பெயரிலான பிரத்தியேக உரிமையை வைத்திருக்கும் நிறுவனம் கடிதங்களை எழுதியிருக்கிறது. அவற்றிலொன்றில் அந்தப் பெயரில் நடாத்தப்படும் சகல வர்த்தக நடவடிக்கைகளும் நிறுத்தப்படவேண்டும் என்றும், அப்படியான வர்த்தக நடவடிக்கைகளில் தாம் ஒத்துழைக்க மாட்டோம் என்றும் அந்த நிறுவனம் குறிப்பிட்டிருக்கிறது.

லாஸ் வேகாஸ் நகரம் சர்வதேச ரீதியில் அங்கே நடக்கும் எல்விஸ் திருமணக் கலாச்சாரத்துக்குப் புகழ் பெற்றது. எல்விஸ் பெயருக்கு உரிமைகளைக் கொண்டிருக்கும் நிறுவனத்தின் நடவடிக்கையால் அங்கே வருடாவருடம் நடந்துவரும் எல்விஸ் பெயரிலான நிகழ்ச்சிகளெதுவும் இல்லாமல் போய்விடும் என்று கருதப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *