சிமெந்தின் விலை குறைப்பு
இந்த வகையில் ஒரு சீமெந்து மூடையின் விலையில் 300ரூபா குறைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார் . இதன் படி 2,300 ரூபாவாகும்.
இதேவேளை கட்டுமான தேவைக்கான பொருட்களின் விலைகளும் குறைவடைந்துள்ளதாக வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதேவேளை வர்ணபூச்சிக்களின் விலையும் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்விலை குறைப்பானது கட்டுமான துறையில் ஈடுப்படும் தொழிலாளர்களுக்கு ஓர் வரப்பிரசாதமாக அமையும் என கருதப்படுகிறது.
[07/07, 19:20] Art Princess: சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு நிலவுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.அண்மையில் சமையல் எரிவாயுவின் விலையினை லிட்ரோ நிறுவனம் குறைந்திருந்தது. இந்நிலையில்,பல்வேறு பிரதேசங்களில் சமையல் எரிவாயு இன்மையால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
பலகொல்ல,கெங்கல்ல,திகன போன்ற பிரதேசங்களில் வாழும் மக்கள் தமது அன்றாட சமையல் தேவைக்கு எரிவாயுவினையே பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சமையல் எரிவாயுவின் தட்டுப்பாடானது இம்மக்களுக்கு பெறும் அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
காலை வேளையில் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பும் நேரத்தில்,அவர்களுக்கான காலை உணவினை சமைக்க முடியாது பெரும் கஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
ஆகவே தமது தேவைகளை நிறைவேற்ற உரியமுறையில் சமையல் எரிவாயுவினை பெற்று தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.