இநதோனேசியாவில் 7.0 ரிச்டர் அளவில் நில நடுக்கம்..!
இந்தோனேசியாவின் பாலிக்கடலில் 7.0 ரிச்ட்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
ஐரோப்பிய மத்திய தரை கடல் நிலையமான EMSC இதனை தெரிவித்துள்ளது.இந்தோனேசியாவின் மாதரத்திற்கு வடக்கே 203 கிலோ மீட்டர் தொலைவில் பூமியின் மேற்பரப்பிலிருந்து 516 கிலோ மீட்டருக்கு ஆழமாகவும் இருந்ததாக EMSC தெரிவித்துள்ளது.இதே வேளை சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை நிலையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் உணரப்பட்டாலும், சேதம் தொடர்பாகவோ,உயிரிழப்புகள் தொடர்பாகவும் எந்த தகவலும் பதிவாக வில்லை என்பது குறிப்பிடதக்கது.