ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் பதிவு..!

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.இன்று காலை 06.00 மணியளவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

இது ரிச்டர் அளவில் 5.3 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தானை ஒட்டிய பலோசிஸ்தானின் நுஷ்கி பகுதியிலிருந்து 65 கி.மீ தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் நிலை கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பல பகுதிகளில் இதன் அதிர்வுகள் உணரப்பட்டன. எனினும் சேத விபரங்கள் ஏதும் வெளியாக வில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *