சிறை பிடிக்கப்பட்டிருந்த மீனவர்கள் மீட்பு..!

சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் 6 பேரும் மீட்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சீஷெல்ஸ் கடலோர காவல்படையினரால் இவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, மூன்று கடற்கொள்ளையர்களையும் சீஷெல்ஸ் கடற்படையினர் கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

குறித்த மீன்பிடி கப்பலில் இருந்த 06 மீனவர்களும் பாதுகாப்பாக உள்ளதாக அந்நாட்டு கடற்படையினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதன்படி, குறித்த மீன்பிடி படகு சீஷெல்சின் விக்டோரியா தலைநகருக்கு கொண்டு செல்லப்படுவதாக கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.

அரபிக்கடலில் இலங்கையை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்த சமயம் அங்கு வந்த கடற்கொள்ளையர்கள் மீனவர்களை கடத்தி சென்றிருந்தனர்.

இஸ்ரேல் பாலஸ்தீன போரின் காரணமாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சரக்கு கப்பல்களை இலக்கு வைத்து தாக்குதல் நடாத்தி வருகின்றனர் இந்த சூழ்நிலையை பயன்படுத்தி சோமாலியாவை சேர்ந்த கடற் கொள்ளயர்கள் மீனவர்களை கடத்தி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை இஸ்ரேல் பாலஸ்தீன போரில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை தாக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா தலைமையில் பல நாடுகள் இணைந்தன. இதற்கு இலங்கையும் தனது பங்களிப்பை வழங்கும் என தெரிவித்திருந்தது.இந்த நிலையில் இந்த மீனவர்கள் கடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *