வெற்றிகரமாக நிறைவேறிய சிதம்பரா கணித போட்டிப்பரீட்சை

வருடாவருடம் நடைபெறும் சிதம்பரா கணிதப்போட்டிக்கான கணிதப்பரீட்சை இந்தவருடமும் வெற்றிகரமாக மார்ச் மாதம் 9 ம்தேதி சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

உலகளாவிய ரீதியில் 23 000 க்கும் அதிகமான மாணவர்களின் பங்குபற்றிய பரீட்சையாக இது இந்தவருடம் அமைந்துள்ளது.

இங்கிலாந்தில் தொடங்கி, பிரான்ஸ், அவுஸ்ரேலியா நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் வியாபித்து தாயகம் வரை பல மாணவர்கள் பங்குபற்றியுள்ளனர்.

தாயகத்தில் அண்ணளவாக 100 பரீட்சை நிலையங்களில் வடக்கு,கிழக்கு,கொழும்பு,புத்தளம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து  பல தமிழ்பேசும் மாணவர்களும் பங்குபற்றியிருந்தனர்.


குறிப்பாக தாயகத்தில் பங்குபற்றும் மாணவர்கள் இலவசமாக பங்குபற்றும் போட்டிப்பரீட்சையாகும்.
இந்த போட்டிப்பரீட்சையில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வெற்றிக்கிண்ணங்கள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்ச்சி அந்தந்த நாடுகளில் வரும் கோடைகாலங்களில் சிறப்பாக இடம்பெறும்.
ஆரம்பமாக இங்கிலாந்தின் சிதமாபரா கணித விழா இந்த வருடம் ஜுலை மாதம் 13 ம் திகதி லண்டனில் குரோய்டனில் அமைந்துள்ள Fairfield மண்டபத்தில் முழுநாள் விழாவாக இடம்பெறவுள்ளது.

தாயகத்திலும் வல்வை மண்ணில் நாடு முழுவதிலுமிருந்து பெருந்திரளானோர் கூடும் நிகழ்வாக நடந்தேறும்.

கடந்த வருடம் பரீட்சையில் முதலிடத்தில் வெற்றிபெற்ற மாணவர்கள் லண்டன் கணித விழா அரங்கில் கௌரவிக்க அழைக்கப்படுவதும் வழமையாகும்.
அத்தோடு  அவர்களுக்கான கல்விச்சுற்றுலாவும் ஒழுங்கு செய்யப்படுவது தாயகமாணவர்களை என்று ஊக்கமளிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *