மரக்கறிகளின் விலை சடுதியாக குறைவு..!

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இன்றைய விற்பனை செய்யப்படும் மரக்கறி வகைகளின் மொத்த விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய கோவா 425 ரூபாவாகவும்,கரட் கிலோ ஒன்றின் விற்பணை விலை 395 ரூபாவாகவும், லீக்ஸ் 210 ரூபா, ராபு 80 ரூபாய், பீட்ரூட் (இலையுடன்) 220 ரூபாவாகவும் , இலை வெட்டப்பட்ட பீட்ரூட் 270 ரூபாவாகவும் மொத்த விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரத்தில் உருளை கிழங்கு (வெள்ளை) 355 ரூபாவாகவும், உருளை கிழங்கு (சிவப்பு) 375 ரூபாவாகவும் ,நோக்கோள் 170 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த காலங்களில் அதிக உச்சவிலை கண்ட நுவரெலியாவில் உற்பத்தி செய்யப்படும் உயர்தர மரக்கறிகளின் விலைகளும் கணிசமாக சரிவு கண்டுள்ளது.

மரக்கறி உற்பத்திகள் அதிகரித்தமையும் சீரான காலநிலையால் விளைச்சல் கூடியமையால் மரக்கறி வகைகளின் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்தவகையில் தக்காளி(பச்சை) 800 ரூபாவாகவும், கறிமிளகாய் 555 ரூபாவாக மொத்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *