முற்றிலுமான கலைக்கதம்பம் |Skanda Night 2024

யாழ்ப்பாணம் ஸ்கந்தவரோதயா கல்லூரி ஐக்கிய இராச்சிய பழையமாணவர்கள் கூடும் Skanda Night நிகழ்ச்சி வரும் ஏப்பிரல் மாதம் 20ம் திகதி நடைபெறவுள்ளது.
இசை நடனம் நாடகம் என கலைக்கதம்பமாக இடம்பெறவுள்ளதாக ஸ்கந்தவரோதயா கல்லூரி பழைய மாணவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியானது London Surbiton இல் அமைந்துள்ள Southborough high school அரங்கில் இடம்பெறும்.

ஐரோப்பிய இளம் இசைக்கலைஞர்களோடு பல்வேறு மேடைகளில் சிறப்பித்த பாடகர்களும்  அரங்கில் சிறப்பிக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

அத்தோடு சாம்பிரதீபனின் எங்கட சனங்கள் நாடகமும் இந்த அரங்கில் முக்கிய நிகழ்ச்சியாக இடம்பெறும் என ஸ்கந்தவரோதயா பழைய மாணவர்கள் குறிப்பிடுகின்றனர்.

முற்றுமுழுதான ஜனரஞ்சக நிகழ்ச்சியாக இருக்கப்போகும் இந்த கலைக்கதம்பம் Skanda night நிகழ்ச்சிக்கு அனைவரையும் இணைந்து கொள்ளுமாறு ஸ்கந்தவரோதயாக்கல்லூரி பழைய மாணவர்கள் சங்கத்தினர் கேட்டுக்கொள்கிறார்கள்.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *