யாழ் இந்துக்கல்லூரியின் திடல் மைதானம் அங்குரார்ப்பணம்
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு விசாலம் பொருந்திய மைதானமாக திடல் இன்று நவீன வசதிகளுடன் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழையமாணவர்களின் நிதிப்பங்களிப்பினால் , நவீன வசதிகளுடனும் வடிவமைப்புடனும் இந்த மைதானம் அமைக்கப்பட்டு கல்லூரி மாணவர்களுக்காக வழங்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய பழையமாணவர்கள் சங்கம் முன்னின்று செயற்படுத்திய “திடல் திட்டம்” என்ற செயற்திட்டம் ஊடாக பாரம்பரியம் மிக்க இந்த மைதானம் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது.
பெரும் பணச்செலவில் அபிவிருத்தி செய்யப்பட்ட இந்த “திடல்”, பிரித்தானிய பழைய மாணவர்கள் முன்னின்று இன்றைய இந்த நிகழ்வை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார்கள்.நேரடியாக பல பிரித்தானிய பழையமாணவர்கள் இந்த நிகழ்ச்சிக்காக யாழ் இந்துக்கல்லூரி நோக்கி இன்றைய நாள் விஜயம் செய்துள்ளனர்.
விரைவில் மழைநீர் வடிந்து ஒடவல்ல வடிகாலமைப்பு வசதி,இலத்திரனியல் Score Board, விளையாட்டு வீரர்களுக்கான தங்குமிட வசதியாக கழகமனை, பயிற்சிகளுக்கான இடம், எதிர்காலத்துக்கு ஏற்ற மைதானப்பராமரிப்பு போன்ற விசேட வசதிகளுடன் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் உள்ளூர் அடையாளங்களை பிரதிபலிக்கத்தக்காகவும் இந்த நவீனமயப்படுத்தலில் அபிவிருத்திக்குழு கூடிய கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய மைதானத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை யாழ் இந்துக்கல்லூரியின் கொழும்பு ரோயல் கல்லூரிக்கும் இடையிலான 30 ஓவர்களுக்குட்பட்ட ,19 வயதுக்குட்டபட்டோருக்கான துடுப்பெடுத்தாட்டப்போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தத்தில் நூற்றாண்டு கால வரலாற்றை நோக்கி நகரும் இந்த மைதானம் திடலாக கல்லூரிக்கு ஒரு திடமான ஒரு பலமான மிடுக்கை கொடுப்பதாக பலரும் கருத்துத்தெரிவித்துள்ளனர்.